அ.தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என தமிழக முதல்வரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற அ.தி.மு.க.வின் தேர்தல் பரப்புரைக் கூட்தில் பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொண்டர் ஒருவரும் முதல்வராக இருக்க முடியும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் தொண்டன் முதல்வராக இருக்கக்கூடிய கட்சி அ.தி.மு.க. மட்டுமே என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சிலர் அதிமுகவை உடைக்க நினைத்தாலும் அந்த முயற்சிகள் தவிடுபொடியாகின என்றும் எதிரிகளும் உச்சரிக்கும் பெயராக எம்.ஜி.ஆர். பெயர் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் எனத் தெரிவித்த அவர் 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அதிமுக மட்டுமே என தனது பரப்புரையில் குறிப்பிட்டார்.