சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் வி.கே.சசிகலா வரும் 27-ஆம் திகதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் விடுதலையானால் அதிமுக நான்காக உடைய வாய்ப்புள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சசிகலா விடுதலையானால் அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர்கள் பலர் சசிகலாவின் ஆதரவாளர்கள் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
சசிகலாவின் விடுதலை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ‘சசிகலா விடுதலையானால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உயிர்த்தெழும் என பேசப்பட்டு வருகிறது.
ஆனால் அதிமுக, அம்மா திராவிடம், பெரியவர், சின்னவர் திராவிடம் என நான்காக உடையவும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.