குஜராத் முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.
இந்தப் படத்தில் நரேந்திர மோடியாக பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் நடித்து, படத்தை தயாரிக்கவும் செய்கிறார். சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாராகவிருக்கிறது. பரேஷ் ராவல் இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஓ மை காட்’ என்ற படத்தை தயாரித்தவர். அதுமட்டுமின்றி, இவர் சர்தார் வல்லபாய் பட்டேலின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ’சர்தார்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
பரேஷ் ராவல் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் என்பதும், குஜராத்தில் நடந்த சென்ற சட்டப்பேரவை தேர்தலில் மோடிக்காக தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.