இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது அஜித்தின் வீரம். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘வீரம்’. இப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகி வெற்றியடைந்து வசூலிலும் சாதனை படைத்தது.
இதில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். தற்போது வீரம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அஜித் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் நடிக்கிறார். இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை பிரித்திஷ் நந்தி வாங்கியுள்ளார்.
தமன்னா நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார். இவர்கள் மூவருடன் இணைந்து சிறுத்தை சிவா மும்பையில் உள்ள மெகபூப் ஸ்டூடியோவில் திரைக்கதையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசனை செய்துள்ளார்.