என்றென்றும் புன்னகை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து த்ரிஷா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் பூலோகம்.
இந்தப் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். ஏற்கெனவே இந்த ஜோடி உனக்கும் எனக்கும் படத்தில் இணைந்து நடித்திருக்கிறது. இது இருவரும் இணையும் இரண்டாவது படம். ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை கல்யாண் கிருஷ்ணன் இயக்குகிறார்.
இந்நிலையில் பூலோகம் படத்திற்காக த்ரிஷா இரண்டாவது முறையாக டாட்டூ ஒன்றை போட்டுக்கொண்டுள்ளார். அதுவும் ஜெயம்ரவி படத்தை டாட்டூவாக கையிலையும், தொடையிலும் வரைந்திருக்கிறாராம். த்ரிஷா, பூலோகம் படத்தில் ஜெயம் ரவியின் காதலி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஆனால் த்ரிஷாவின் இந்த டாட்டூ தற்காலிகமானது தானாம். த்ரிஷா மார்பில் வரைந்திருக்கும் மீன் டாட்டூ போன்று நிரந்தரமானதல்ல என்கின்றனர் படக்குழுவினர்.