ஆடுகளம் டாப்சி, தமிழ், தெலுங்கு, இந்தி என பரவலாக நடித்தபோதும் இன்னமும் எந்த மொழியிலும் அவருக்கு கமர்சியல் ரீதியாக இடம் கிடைக்கவில்லை.
அதனால் தொடர்ந்து போராடிக்கொண்டு வரும் டாப்சி, ஆரம்பத்தில் இந்த மாதிரியான டீசன்டான வேடங்களில்தான் நடிப்பேன். இந்த மாதிரியான உடைகளைதான் அணிந்து கொள்வேன் என்று ஏகத்துக்கு எடுத்துவிட்ட கண்டிசன்களை இப்போது மொத்தமாக ஓரங்கட்டி விட்டார்.
மேலும், தற்போது தமிழில் நடித்து வரும், முனி-3 கங்கா மற்றும் ரன்னிங் சாதி.காம் இந்த படங்களை பெரிய அளவில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் டாப்சி.
அதோடு, இந்த வேகத்தில் அதிரடியான படங்களை கைப்பற்றி விட வேண்டும் என்றும் திரைக்குப்பின்னால் தீவிரம் காட்டி வரும் அவர், இதற்கு முன்பு ஆர்யா உள்ளிட்ட சில ஹீரோக்கள் தன்னை கழட்டி விட்டதால் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை பண்ணும் டைரக்டர்களுடன் சந்திப்பு நடத்தி வருகிறார்.
அப்போது, இந்தசினிமாவில் பெரிய அளவில் சாதிகக் வேண்டுமென்று வந்தேன். ஆனால், என் திறமையை முழுசாக வெளிக்கெண்டு வரும் வேடங்கள் இன்னமும் அமையவிலலை.
அதனால் என் திறமைக்கு தீனி போடும் வேடங்கள் கொடுத்தால் எத்தனை நாள் கால்சீட் வேண்டுமானாலும் தருகிறேன். எத்தனை ரிஸ்க்கான காட்சிகளிலும் நடிக்கத்தயாராக இருக்கிறேன் என்று டைரக்டர்களை கேட்டுக்கொண்டு வருகிறார் டாப்சி.