சிவாஜி படத்தில் ரஜினியுடன ஜோடியாக நடித்து சிவாஜி கேர்ள் என்று கோடம்பாக்கத்தில் வளைய வந்தவர்தான் ஸ்ரேயா.
ஆனால், அதையடுத்து அவர் பெரிதும் எதிர்பார்த்த ´கந்தசாமி´ கௌத்து விட்டதால், இந்திரலோகத்தில் நா.அழகப்பனில் வடிவேலுவுடன் குத்துப்பாட்டுக்கு நடனமாடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
அதையடுத்து, ஸ்ரேயாவுக்கு வாய்ப்பு கொடுக்கயிருந்த ஹீரோக்கள்கூட, காமெடியன் வடிவேலுவுடன் குத்துப்பாட்டுக்கு ஆடியவரை நமக்கு ஜோடியாக்குவதா? என்று அவரை கழட்டி விட்டனர்.
இப்படியாக சரிவை சந்தித்த ஸ்ரேயா, பாலாவின் தாரை தப்பட்டை படத்திற்கு முதலில் தன்னை அழைத்தபோது பெரும் மகிழ்ச்சியுடன் ஓடோடி வந்தார்.
ஆனால், பாலாவுக்கு வேண்டப்பட்ட சில இளவட்ட நாயகர்கள் இடையில் புகுந்து அந்த வாய்ப்பை வரலட்சுமிக்கு திருப்பி விட்டனர். இதனால் ஸ்ரேயாவின் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது.
அதையடுத்து இப்போது ராமானுஜம் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அவர், இப்போதைய நிலவரப்படி நாயகர்களின் அணுக்கிரகம் நமக்கு இருந்தால் மட்டுமே பெரிய படங்களை கைப்பற்ற முடியும் என்பதை தெரிந்து கொண்டார்.
அதனால், சுயமாக படவேட்டை நடத்துவது வேலைக்கு ஆகாது என்பதால், கோலிவுட்டில் தனது நண்பர் பட்டியலில் இருக்கும் விக்ரம், ஜெயம்ரவி, தனுஷ், ஆர்யா ஆகியோரிடம் நேரடியாகவே சிபாரிசு கேட்டு வருகிறாராம்.
மேற்படி நாயகர்களின் தயவு ஸ்ரேயாவுக்கு உள்ளதா? என்பது கூடிய சீக்கிரமே தெரிந்து விடும்.