சிவாஜி குடும்பத்து வாரிசு விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம் இவன் வேற மாதிரி. எங்கேயும் எப்போதும் சரவணன் டைரக்ட் செய்திருந்தார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரித்தது. விக்ரம் பிரபுக்கு ஜோடியாக புதுமுகம் சுரபி நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த டிசம்பர் மாதம் 13ந் தேதி ரிலீசானது.
கும்கி படத்துக்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம், எங்கேயும் எப்போதும் படத்துக்கு பிறகு சரவணன் இயக்கும் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்புகளுடன் படம் ரிலீசானது. ஆனால் எதிர்பார்த்த ரிசல்ட்டை படம் கொடுக்கவில்லை. என்றாலும் தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் லாபமும் இல்லை, பெரிய அளவில் நஷ்டமும் இல்லை என்பது சினிமா வியாபார வட்டார தகவல். படம் 25 நாட்கள் நல்ல வசூலுடன் ஓடியது. சென்னையில் மட்டும் சில தியேட்டர்களில் 50வது நாளை தொட்டது. அதுவும் ஓரிரு காட்சிகளாக.
சிவாஜி குடும்பத்தின் தியேட்டரான சென்னை சாந்தியில் தினமும் ஒரு காட்சியாக திரையிட்டு 100வது நாளை எட்டிப்பிடிக்க வைத்துவிட்டார்கள். கும்கியை போலவே இந்தப் படமும் 100 வது நாள் போஸ்டரை கண்டுவிட்டதில் சிவாஜி குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி.