0
பிரபல இசை அமைப்பாளரும், பாடகருமான கங்கை அமரன் வீட்டில் திடீர் ரெய்டு நடந்தது. இது வருமானவரித்துறை நடத்திய ரெய்டு அல்ல. குழந்தைகள் நல அமைப்பினர் நடத்திய ரெய்டு. கங்கை அமரன் தனது வீட்டில் சிறுவர், சிறுமிகளை வேலைக்கு வைத்திருப்பதாகவும், குழந்தை தொழிலாளர்கள் சட்டத்தின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழந்தைகள் நல அமைப்புக்கு புகார்கள் பறந்தது.
இதையடுத்து குழந்தைகள் நல அமைப்பை (சைல்டு ஹெல்ப் லைன்) சேர்ந்தவர்கள் போலீஸ் துணையுடன் கங்கை அமரன் வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 2 சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெற்றோர்கள் அனுமதியுடன்தான் அவர்கள் பணியமர்த்தப் பட்டிருக்கிறார்கள் என்று கங்கை அமரன் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்த அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் விசாரணை நடத்த குழந்தைகள் நல அமைப்பினர் முடிவு செய்திருக்கிறார்கள். இன்று (ஜூன் 18) கங்கை அமரன் வீட்டில் விசாரணை நடக்கிறது.