பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ‘ஷமிதாப்’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், மாற்றுத்திறனாளியாக நடிக்கிறாராம், தனுஷ். படப்பிடிப்பின்போது, தனுஷை கூர்ந்து பார்த்துகொண்டே இருந்தாராம், அமிதாப். இதுபற்றி சக நடிகர்கள் அவரிடம் கேட்க, அதற்கு அவர், ‘உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் பிரேசில் வீரர் நெய்மர் போலவே, தனுஷின் தோற்றம் இருக்கிறது. அதனால், தனுஷை, இனி நெய்மர் என்று தான் அழைக்கப் போகிறேன்’ என்றாராம். இந்த பாராட்டில் உருகிப்போன தனுஷ், இதை தன் ட்விட்டரிலும் வெளியிட்டு, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
0