தமிழில் ‘ஜீன்ஸ்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராய். இந்தியிலும் பல படங்களில் நடித்து புகழ்பெற்ற இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தி நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.
அதன்பிறகு ஐஸ்வர்யா ராய், கர்ப்பம், பிரசவம் குழந்தை வளர்ப்பு என குடும்ப வேலைகளில் மூழ்கி இருந்ததால் சினிமாவுக்கு தற்காலிக முழுக்க போட்டு இருந்தார். உடம்பும் வெளுத்தது.
தற்போது பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். சஞ்சய் குப்தா இயக்கும் இந்தி படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. இதற்காக கடும் உடற்பயிற்சிகள் எடுத்து எடையை குறைத்துக் கொண்டு இருக்கிறார்.