பிரபல இந்திப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா ‘சாவித்திரி’ என்ற பெயரில் ஒருபடம் இயக்கி உள்ளார். இதற்காக அறிமுக விழாவில் படத்துக்கான சுவரொட்டியை வெளியிட்டார்.
ஆசிரியையுடன் பள்ளி மாணவனுக்கு ஏற்பட்ட காதலை மையமாக கொண்டு சாவித்திரி கதை உருவாக்கப்பட்டது என்றும், எனது வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தை கதையாக சொல்லி இருப்பதாகவும் ராம்கோபால் வர்மா பேட்டி அளித்தார்.
சாவித்திரி பட சுவரொட்டி ஆபாசமாக இருப்பதாக கூறி பெண்கள் அமைப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஐதராபாத் நகரில் சாவித்திரி பட சுவரொட்டியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பள்ளி மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக ராம்கோபால் வர்மா மீது பெண்கள் அமைப்பினர் குற்றம் சாட்டினார்கள்.
அதோடு ‘‘சாவித்திரி’’ என்றால் பத்தினி பெண்ணை குறிப்பது ஆகும். அந்த பெயரை ராம்கோபால் வர்மா ஆபாச படத்துக்கு பெயர் சூட்டி கொச்சை படுத்தி உள்ளார்’’ என்றும் கடுமையாக சாடினார்கள்.
இதற்கிடையே ஒரு தயாரிப்பாளர் ‘சாவித்திரி’ என்ற பெயரை நான் ஏற்கனவே பதிவு செய்து இருப்பதாக புகார் தெரிவித்தார். இந்த எதிர்ப்பு காரணமாகவும், பெண்கள் அமைப்பினர் போராட்டம் காரணமாகவும் ராம்கோபால் வர்மா சாவித்திரி படத்தின் பெயரை மாற்றி ஸ்ரீதேவி என்று சூட்டினார். இதுதொடர்பாக அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
இப்போது இந்த பெயருக்கும் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. ஸ்ரீதேவி என்ற பெயருக்கு ஆட்சேபனை தெரிவித்து பிரபல நடிகை ஸ்ரீதேவி இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளார்.
தனது நோட்டீசில் ஸ்ரீதேவி கூறியிருப்பதாவது:–
நான் குழந்தையாக இருந்தே படங்களில் நடித்து வருகிறேன். பல மொழிப் படங்களில் நடித்து உள்ளேன். எனது நடிப்புக்காக அரசு சார்பில் பல விருதினை பெற்று உள்ளேன். அதோடு படத்தின் புதிய பெயரை எனக்கு தெரிவிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளையும் விதித்து உள்ளார்.
எனக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். உங்களது ஆபாச படத்துக்கு எனது பெயரை பயன்படுத்தி இருப்பதாக அறிந்தேன். இதனால் எனது பெயருக்கு களங்கம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நோட்டீசு கிடைத்த 3 நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்ற வேண்டும். இல்லையேல் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதோடு பெயரை மாற்றியதற்கான எழுத்துபூர்வமான உறுதிமொழி அளிக்க வேண்டும். எனது பெயரை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்த நோட்டீசு குறித்து விளக்கம் அளிக்க ஸ்ரீதேவி கணவர் போனிகபூரிடம் ராம்கோபால் வர்மா தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால் அதற்கு பயன் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.