காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். இவர் தற்போது சம்சாரம் ஆரோக்கியதினு ஹானிகாரம் என்ற மலையாள படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதையடுத்து, தனுஷின் வுண்டர் பார் பிலிம்சுக்காக ஒரு படத்தை தனுஷ்-காஜல் அகர்வாலை ஜோடி சேர்த்து இயக்குகிறார்.
தற்போது அனேகன், ஷமிதாப் பட வேலைகளில் இருக்கும் தனுஷ், அடுத்து வெற்றிமாறனின் சூதாடி படத்தை முடித்ததும் இந்த படத்தின் வேலைகள் தொடங்குகிறதாம். இப்படத்தில் பாலாஜிமோகன் ஏற்கனவே இயக்கிய வாயை மூடி பேசவும் படத்தில் காமெடியனாக நடித்த ரோபோ ஷங்கர் முக்கிய காமெடியனாக நடிக்கிறாராம். அவரிடம் மொத்தம் 60 நாட்கள் கால்சீட் வாங்கியிருக்கிறாராம் பாலாஜிமோகன்.
மேலும், வாயை மூடி பேசவும் படத்தில் ரோபோ ஷங்கர் நடித்த காமெடி காட்சிகள் ஹைலைட்டாக அமைந்ததினால் இந்த படத்தில் அவரது காமெடி காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாராம் பாலாஜிமோகன். அதனால் இப்போது அடிக்கடி சந்திக்கும் அவர்கள், காமெடி காட்சிகளை மெருகேற்றும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதனால், இதற்கு முன்பு, தீபாவளி, இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும் உள்பட சில படங்களில் நடித்த ரோபோ ஷங்கர் தனுஷ் படத்தில் இருந்து சினிமாவில் ஷோலோ காமெடியனாக பிரவேசிக்கிறாராம்.