அஜீத்தும் ஷாலினியும் 1999-ல் அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 2000-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். 2008-ல் இவர்களுக்கு முதல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அனோஷ்கா என பெயரிட்டனர். இப்போது இந்த நட்சத்திர தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்து உள்ளது.
கர்ப்பமாக இருந்த ஷாலினிக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஷாலினுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அஜீத்தும் ஆஸ்பத்திரியில் இருந்தார். மகன் பிறந்ததும் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார். உறவினர்களும், நண்பர்களும் ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தையை பார்த்தனர். அஜீத்துக்கு சக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் போனில் வாழ்த்து கூறி னார்.
அஜீத் நடித்த என்னை அறிந்தால் படம் சமீபத்தில் ரிலீசானது. தற்போது அவர் ஓய்வு எடுக்கிறார். அடுத்த பட வேலைகள் இரு மாதங்கள் கழித்து தொடங்கும் என தெரிகிறது.
வாழ்த்துக்கள்