கமல்-ஸ்ரீதேவி ஜோடியாக நடித்து 1978-ல் வெளிவந்து வெற்றிகரமாக ஒடிய படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’ இப்படத்தை பாரதிராஜா இயக்கினார். இளையராஜா இசையமைத்தார். கமல் இந்த படத்தில் பெண்களை கொலை செய்யும் சைக்கோ வில்லன் கேரக்டரில் வந்தார்.
‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தை பாரதிராஜா மகன் மனோஜ் டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஸ்ரீதேவியை அணுகியுள்ளார்.
ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் விஜய்யுடன் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். எனவே ‘சிகப்பு ரோஜாக்கள்’ இரண்டாம் பாகத்தில் நடிக்க அவர் சம்மதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதிராஜா படங்கள் மூலம் தான் ஸ்ரீதேவி பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘16 வயதினிலே’ படத்தில் அவரது மயிலு கேரக்டர் இன்றும் பேசப்பட்டு வருகிறது.