தனுசுக்கு இந்திப்பட வாய்ப்புகள் குவிகின்றன. ‘ராஞ்சனா’ என்ற படம் மூலம்தான் இந்தியில் அறிமுகமானார். 2013–ல் இப்படம் வந்தது. இவருக்கு ஜோடியாக சோனம்கபூர் நடித்து இருந்தார். இந்த படம் வெற்றிகரமாக ஓடி தனுசை இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது.
தொடர்ந்து அமிதாப்பச்சனுடன் ‘ஷமிதாப்’ படத்தில் நடித்தார். இதுவும் வசூலை வாரிக் குவித்தது. தற்போது ‘மாரி’ மற்றும் வேல்ராஜ் இயக்கும் தமிழ் படங்களில் நடிக்கிறார். இப்படங்களை முடித்து விட்டு மீண்டும் இந்திக்கு போகிறார்.
இதற்காக மும்பையில் வீடு வாங்கி இருக்கிறாராம் தனுஷ். மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த வீட்டை வாங்கி இருக்கிறார். இதற்கு முன்பு படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் போது ஓட்டல்களில் தங்கினார். இனி புதிதாக வாங்கிய வீட்டில் தங்கப் போகிறார். இந்தி, தமிழ் படங்களில் மாறி மாறி நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.