பிரபல டான்ஸ் மாஸ்டர் கலா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, பெங்காலி என பல மொழி படங்களில் 10 ஆயிரம் பாடல்களுக்கு மேல் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி உள்ளார். தற்போது டெலிவிஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். கலா நடன இயக்கத்தில் தயாரான மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு கின்னஸ் சாதனை விருது கிடைத்துள்ளது.
இது குறித்து டான்ஸ்மாஸ்டர் கலா கூறும்போது, ‘எனது நடன நிகழ்ச்சிக்கு கின்னஸ் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அரங்கில் கஷ்டப்பட்டு நடன குழுவினர் ஆடினார்கள். புது மாதிரியாக வித்தியாசமான முறையில் இதை உருவாக்கினோம். கஷ்டப்பட்டதுக்கு பலனாக இந்த விருது கிடைத்துள்ளது. இந்த சாதனைக்கு ரகுமாஸ்டரும் கே.பாலசந்தரும் அடித்தளமிட்டதை நினைத்து பார்க்கிறேன்.
சினிமா நடிகர், நடிகைகளில் விஜய், சிம்ரன் சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர்கள் சொல்வதை புரிந்து திறமையாக ஆடுவார்கள். நன்றாக ஆடக்கூடிய வேறு சில நடிகர்களும் இருக்கிறார்கள் என்றார்.