பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இப்படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் குவிக்கின்றன. இதையடுத்து முன்னணி கதாநாயகர்களும் பேய் படங்களில் நடிக்க துவங்கியுள்ளனர்.
சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ படம் பேய் கதையம்சம் கொண்டது. இதன் டிரெய்லரில் சூர்யா நீண்ட பற்களுடன் பேய் போல் வந்து மிரட்டும் காட்சி இடம் பெற்றுள்ளது. இப்படம் வருகிற 29–ந்தேதி ரிலீசாக உள்ளது.
இதையடுத்து ஆர்யாவும் பேய் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஜீவா சங்கர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஆர்யாவின் தம்பியை வைத்து ‘அமர காவியம்’ படத்தை எடுத்தவர். அவர் சொன்ன பேய் கதை பிடித்து போனதால் ஆர்யா நடிக்க ஒப்புக் கொண்டாராம். இதில் அவர் பேய் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆர்யா தற்போது ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘யட்சன்’, ‘இஞ்சி இடுப்பழகி’, போன்ற படங்களில் நடித்து வருகிறார்.