சுந்தர் சி இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த அரண்மனை படம் பெரிய வெற்றி பெற்றது. ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா, வினய் நடிப்பில் உருவாகியிருந்த படம் திகில் நிறைந்த பேய் படமாக உருவாகியிருந்தது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ 2-ம் பாகத்தை எடுக்க சுந்தர்.சி முன்வந்தார். அதற்கான வேலைகளிலும் களமிறங்கினார். அதன் தொடர்ச்சியாக ‘அரண்மனை’ 2-ம் பாகத்தை தொடங்குவதாக அறிவித்தார்.
இப்படத்திலும் ஹன்சிகா மொத்வானியே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், திரிஷா, சித்தார்த் ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘அரண்மனை’ முதல் பாகத்தில் சந்தானம் காமெடியனாக நடித்திருந்தார். ஆனால், இரண்டாம் பாகத்தில் அவருக்கு கல்தா கொடுத்துவிட்டு சூரியை காமெடியனாக்கி இருக்கிறார் சுந்தர்.சி. மேலும், இன்னொரு நாயகி தேவைப்படுவதால் காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு சமீபகாலமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது, வில்லன் கதாபாத்திரத்திற்கு ‘ஆடுகளம்’ நரேன் தேர்வாகியிருக்கிறார்.
மேலும், இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். சுந்தர்.சி படத்துக்கு இரண்டாவது முறையாக இவர் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஜுலையில் தொடங்க இருக்கிறார்கள்.