நேற்றைய தினம் லண்டனில் வல்லதேசம் திரைப்படத்தின் சிறப்புக்காட்சி காண்பிக்கப்பட்டது. நாசர், அனுஹாசன், லண்டன் பாபா, ரமேஷ் வேதநாயகம் மற்றும் பல இந்திய, லண்டன் நடிகர்களின் நடிப்பில் உருவான இத்திரைப்படம் மிக விரைவில் வெளிவர உள்ளது.
இப்படத்தில் லண்டனைச் சேர்ந்த முல்லை நிஷாந்தனின் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
இன்று உலகமயப்பட்டுள்ள ஓர் முக்கிய பிரச்சினையை மையமாக வைத்து திரைக்கதையை உருவாக்கி இயக்கியுள்ளார் லண்டனில் வாழும் ஈழத்தமிழ் இயக்குனர் நந்தா.
இயக்குனர் நந்தா இயல்பாகவே சிறந்த ஒளிப்பதிவுக் கலைஞர் அவரது திறமை ஓவ்வொரு காட்சியிலும் சிறப்பாகவே தெரிகின்றது.
லண்டன் நகர் இவ்வளவு அழகா என வியப்படையாமல் இருக்க முடியாது. அவ்வளவுக்கு அழகாக காட்சிக்கு காட்சி ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.
நேற்றையதினம் சிறப்பாக அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு சிறப்புக்காட்சியாக இத்திரைப்படம் வெம்பிலி சினிவேர்ல்ட் திரையரங்கில் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திரைப்படத்தில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுத்து மதிப்பளிக்கப்பட்டது.