இலண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழ் நடனப் போட்டிக்கு நடுவராக கலந்து கொள்ள தமிழ் திரைப்படத்துறை நடன இயக்குனர் கலா மாஸ்டர் லண்டன் வருகை தந்திருந்தார். இந்திய தமிழ் சினிமாவில் நடன இயக்கத்தில் தனக்கென்ற இடத்தை வைத்திருக்கும் கலா மாஸ்டர் இந்தியாவின் பல மொழி திரைப்படங்களிலும் பனி புரிந்துள்ளார்.
சுமார் 2000 திரைப்படங்களுக்கு மேலாக நடன இயக்குனராக பணிபுரியும் இவர் முதல் தடவையாக தமிழ் நடனப் போட்டிக்கு நடுவராக வருகை தந்துள்ளார்.
காலா மாஸ்டரின் தீவிர ரசிகனான இவர் அவரை மேடையில் வைத்து தனது அணைப்பை வெளிப்படுத்தும் விருப்பத்தை நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு அச்சந்தர்ப்பம் வழங்கப்பட்ட்து.
மேடையில் வைத்து சுமார் ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் முழங்காலில் மண்டியிட்டு தனது தீரா அன்பை மோதிரம் அணிவித்து வெளிப்படுத்தினார்.
ஒரு நிமிடம் திகைத்து நின்ற கலா மாஸ்டர் பின்னர் தனது ரசிகனின் அன்பை ஏற்றுக்கொண்டார்.