விஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத் தமிழன்’ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிந்தது. தொடர்ந்து ‘துக்ளக் தர்பார்’, முரளிதரனின் பயோபிக், ‘மாமனிதன்’, ‘லாபம்’, ‘கடைசி விவசாயி’ எனப் பல்வேறு படங்கள் இவரது கைவசம் உள்ளன.
Vijay Sethupathi ( Super Deluxe )
தொடர்ந்து பல படங்களின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வந்த விஜய் சேதுபதி, இதன் விருது விழாவில் கலந்துகொள்ள நேற்று ஆஸ்திரேலியா சென்றுள்ளார். மேலும், இரண்டு நாள்கள் விருது விழாவில் கலந்துகொண்டு முடித்த பின், நான்கு நாள்கள் அங்கிருந்து ஆஸ்திரேலியாவைச் சுற்றிப் பார்த்து முடித்துவிட்டு நாடு திரும்புகிறார். விஜய் சந்தர் இயக்கும் ‘சங்கத் தமிழன்’ படத்தின் பாடல் காட்சிகள் மட்டும் இன்னும் படமாக்கப்பட இருக்கிறது. இதன் ஷூட்டிங் வரும் 13-ம் தேதி ஆரம்பித்து மூன்று நாள்கள் நடக்க இருக்கிறது.