செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்கனடா கனடாவில் நடைபெறும் ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா | ஊடக அறிக்கை 

கனடாவில் நடைபெறும் ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா | ஊடக அறிக்கை 

4 minutes read

 

எதிர்வரும் செப்டம்பர் மாதம் கனடாவில் நடைபெறவுள்ள ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா 2020 பற்றிய  ஊடக அறிக்கையினை ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர். மேற்கு நாடுகளில் தமிழர்கள் பெருமளவு வசித்துவரும் கனடாவில்  தமிழ் திரைப்பட விழா நடைபெறுவது புலம்பெயர் தமிழர்களில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.  

ஊடக அறிக்கையின் முழு வடிவம்;

 

ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா 2020

 

ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் (2020) செப்டம்பர் மாதம் (September 11 – 13, 2020) மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.  இதற்கான பணிகள் சகல மட்டங்களிலும் ஆரம்பமாகி திரைப்பட விழாவுக்கான திரைப்படங்களும் பல்வேறு பிரிவுகளில் கோரப்பட்டுள்ளன.

உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன.

இந்திய மற்றும் இலங்கைக்கு அப்பால், தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் இந்நிகழ்வு ஒழுங்குசெய்யப்படுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது.

கனடிய அரசு கனடாவில் வாழும் தமிழர்களை சகல வழிகளிலும் அவர்களது கலை, கலாச்சார நிகழ்வுகளை அங்கீகரித்து, அதற்க்கான சகல ஒத்துழைப்பை வழங்குவதோடு அரசு தலைவர்கள் வரை தமது பங்களிப்பினை சிறப்பாக செய்துவருகின்றார்கள்.

எனவே, கனடாவில் நடைபெறும் இவ் திரைப்பட விழா, உலக தமிழ் திரைப்படங்களுக்கும், கலைஞர்களுக்கும் மிகப்பெரும் அங்கீகாரமாக அமையும் என்பது உண்மை.

[அத்துடன் உலகில் நடக்கும் மிகவும் பெரிய திரைப்பட விழா என அறியப்பட்ட Toronto International (TIFF) திரைப்பட விழாவும் இந்த வாரத்திலேயே நடைபெறவுள்ளதால், ரொரான்ரோ வரும் திரைப்பட ரசிகர்கள், கலைஞர்கள், இந்த இரண்டு விழாக்களிலும் பங்குபற்றக்கூடிய வாய்ப்பாக இந்த திகதிகள் அமைகின்றன.]

பல்லாயிரம் தமிழ் திரைப்படங்கள், குறும்படங்கள் என்பன வெளிவருகின்ற போதிலும், அத்திரைப்படங்கள் தமிழ் அல்லாத திரைப்பட விழாக்களிலேயே சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் நிலையே இதுவரை காலமும் தமிழ் திரை கலைஞர்களுக்கும், திரைப்படங்களுக்கும் உள்ள நிலை.

நிச்சயமாக ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இக்குறையை நிவர்த்திசெய்யும்.

தமிழ் திரைப்படங்களையும், அதன் பின்னால் உள்ள கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி, பாராட்டி, மகிழ்ந்து கொண்டாட ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா வரும் செப்டம்பர் 2020 ரொரான்ரோவில் நடைபெறவுள்ளது.

உலகத் தமிழர்களுக்கான தனித்துவமான திரை அடையாளமாக, திரைக்களமாக, பல்வேறு வகையான தமிழ்த் திரைப்படங்கள், குறும் படங்கள், ஆவணப்படங்கள், இசை ஆல்பங்கள் என வெவ்வேறு பிரிவுகளின் கீழே போட்டியிட்டு தகுதியுடையவர்கள் “விருதினையும், பரிசில்களையும், அங்கீகாரங்களையும்” பெற்றுக்கொள்வார்கள்.

உலகம் முழுவதும் வாழ்கின்ற திரை மற்றும் கலைஞர்களுக்கான மிகப் பெரிய திரையிடல், பயிட்சி, பட தயாரிப்பு உதவி களமாக ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா அமையும்.

பல்வேறு பிரிவுகளில் திரையிடல் மற்றும் போட்டிக்குத் தெரிவாகும் திரைப்படப் போட்டிகளுக்கான விண்ணப்ப அழைப்பிதழ் :

January 05. 2020 தொடங்கி விண்ணப்ப முடிவுத் திகதி : May 31, 2020 நிறைவுபெறும்.

ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழாவின்(2020) போட்டிகளுக்கான பிரிவுகள் :

உங்கள் படைப்புகளை காலக்கிரமத்தில் கீழே உள்ள இணைப்பினூடாக அனுப்பி வையுங்கள்!

https://filmfreeway.com/ttiff/

ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இணையத்தளம்

http://www.ttff.ca 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More