செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடனங்களை சொல்லி கொடுத்து ரூ.5 கோடி நிவாரணத்துக்கு வழங்கியா கவர்ச்சி நாயகி.

நடனங்களை சொல்லி கொடுத்து ரூ.5 கோடி நிவாரணத்துக்கு வழங்கியா கவர்ச்சி நாயகி.

1 minutes read

கொரோனா ஊரடங்கினால் கூலித் தொழிலாளர்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நடிகர்-நடிகைகள் பலர் உதவி வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்தொலாவும் ரூ.5 கோடி நிதி வழங்கி உள்ளார். தமிழில் வெற்றிபெற்ற ‘திருட்டுப்பயலே-2’ படத்தின் இந்தி ரீமேக்கில் அமலாபால் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி-4, பகல் பந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் உடல் எடையை குறைப்பதற்காக இணையதளத்தில் நடன வகுப்புகளை நடத்தினார். ஸூம்பா, லதின், டபாடா நடனங்களை சொல்லி கொடுத்தார். இது டிக்டாக் மூலம் அதிகமானோரை சென்றடைந்தது. இதன் மூலம் அவருக்கு ரூ.5 கோடி கிடைத்துள்ளது. அந்த தொகையை கொரோனா நிவாரணத்துக்கு வழங்கி உள்ளார்.

அவர் கூறும்போது, “கொரோனா பாதிப்புகளுக்கு அனைவரும் உதவ வேண்டும். எவ்வளவு நன்கொடை கொடுத்தாலும் அதை குறைத்து மதிப்பிட கூடாது. நிவாரணம் வழங்கிய அரசியல்வாதிகள், நடிகர்களை பாராட்டுகிறேன்” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More