பிரபல நடிகையாக இருக்கும் சுருதி ஹாசன் கொரோனா ஊரடங்கு நேரத்தை வீட்டு வேலை, சமையல், இசை என்று வீணாக்காமல் கழிக்கிறேன். கதை, கவிதையும் எழுதுகிறேன். எனக்கு கனவு பாத்திரம் எதுவும் இல்லை. ஆனாலும் ஒரு இசைக்கலைஞர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் நல்ல கதையம்சம் உள்ள படத்தில் வலுவான கதாபாத்திரமாக இருக்கும்பட்சத்தில் வில்லியாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன். இப்போது மீண்டும் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்ததுள்ளது. எனது கையில் மூன்று படங்கள் உள்ளன. அதில் கவனம் செலுத்துகிறேன்.
இசைபணிகளுக்காக அடிக்கடி லண்டனுக்கும் செல்ல வேண்டி இருக்கிறது. சினிமா, இசை இரண்டிலும் உற்சாகத்தோடு ஈடுபடுகிறேன். சம்பளம் பற்றி யோசிப்பது இல்லை. அது முக்கியமான விஷயமும் இல்லை. சினிமா தொழிலாளர்கள் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் இப்போது முக்கியம்.”