கடந்த இரண்டு மூன்று நாட்களாக ரஜினிகாந்த் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே .சமீபத்தில் ரஜினிகாந்த் தனது மகள் குடும்பத்துடன் போயஸ் கார்டனிலிருந்து கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு காரில் சென்றார். அப்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாது மட்டுமின்று ‘லயன் இன் லம்போர்கினி உள்பட ஒருசில ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் தெறிக்க வைத்தது என்பது தெரிந்ததே.
மேலும் ரஜினிகாந்து இபாஸ் எடுக்காமல் கேளம்பாக்கம் சென்றதாக கூறப்பட்டதை அடுத்து இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்துக்கு ரூபாய் 100 அபராதம் விதிக்கப்பட்டதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் கடந்த ஜூன் 26ஆம் தேதி சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதாகவும் இதற்காக அவருக்கு ரூபாய் 100 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் இந்த அபராத்தை அவர் ஜூலை 23ல் செலுத்தியதாகவும் ஒரு ரசீது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய ரஜினிகாந்த் ரூபாய் 100 அபராதம் செலுத்திய செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.