பாலிவுட் படங்களில் இசை அமைக்க கிடைத்த வாய்ப்புகளை ஒருசில கும்பல் தடுத்ததாக இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் சமீபத்தில் பேட்டியளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எனக்கும் திரை உலகில் அநியாயம் நடந்துள்ளதாக பிரபல நடிகை தமன்னா குற்றம்சாட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
சுஷாந்த்சிங் தற்கொலை சம்பவத்திற்குப் பின்னர் திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும் வாரிசு நடிகர் நடிகைகள் மட்டுமே வாய்ப்பு பெற்று வருவதாகவும், மற்றவர்கள் ஒதுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ஏ.ஆ.ரஹ்மான் அவர்கள் ஆஸ்காருக்கு பின் பாலிவுட்டில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை ஒருசிலர் தடுத்தனர் என்று பேட்டியளித்தார். இந்த பேட்டியின் பரபரப்பு முடிவதற்குள்ளே இதேபோன்ற ஒரு குற்றச்சாட்டை தற்போது தமன்னாவும் வைத்துள்ளார்.
திரை உலகில் தனக்கும் அநியாயம் நடத்த உள்ளதாக கூறியுள்ள தமன்னா, ’எனக்கு பல தடவை விருதுகள் கொடுக்க எனது பெயர் பரிசீலிக்கப்பட்டது என்றும் ஆனால் எனது பெயர் பரிந்துரை பட்டியலில் இருந்தாலும் எனக்கு ஒரு முறை கூட விருது கிடைக்கவில்லை என்றும் வாரிசு நடிகர், நடிகைகளுக்கே பெரும்பாலும் விருது கிடைத்து வருகிறது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். திறமையான நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் தந்தால்தான் அவர்களை ஊக்குவிக்க முடியும் என்றும் ரசிகர்கள் ஆதரவு இருந்தாலும் விருதுகள் ஒவ்வொரு கலைஞருக்கும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். தமன்னாவின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது