இன்றைய காலகட்டத்தில் மனித வாழ்வுக்கு சமூக ஊடகங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. இந்நிலையில் 15ஆம் ஆண்டு ‘எடிசன் திரை விருது’ பட்டியல் பல்வேறு நாடுகளில் உள்ள தினசரி நாளிதழ்கள், பண்பலைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், எடிசன் செயலி இணையதளம் மூலம் தேர்வுப் பட்டியல் நவம்பர் 15ஆம் திகதி முதல் வாக்குகளை பெற்று வருகிறது.
எடிசன் விருது தேர்வுப் பட்டியலை இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களோடு, இந்தியாவின் முன்னணி சமூக ஊடகமான ஷேர் சாட்டில் (Sharechat) 80 மில்லியன் பார்வையாளர்களும், ஜோஷ் (Josh) சமூக வலைத்தளத்தில் 68 மில்லியன் டிஜிட்டல் பார்வையாளர்களும், பல்வேறு நாடுகளில் எடிசன் விருதுக்கு ஊடக அனுசரணையாக விளங்கிவரும் பல்வேறு சமூக ஊடகங்கள் மூலம் 50 மில்லியன் டிஜிட்டல் பார்வையாளர்களும் இதுவரை கண்டுகளித்துள்ளனர்.
எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை வாக்களிப்பு நடைபெறும் தேர்வுப் பட்டியல், உலகத் தமிழர்களால் 250 மில்லியன் டிஜிட்டல் பார்வையாளர்களை எட்டிவிடும் என சமூக ஊடக பொறுப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உலக மக்கள் தொகையில் 2 சதவிகிதம் மட்டுமே உள்ள தமிழ் சமுதாயத்துக்கு 200 மில்லியன் டிஜிட்டல் பார்வையாளர்கள் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்திய அளவில், குறிப்பாக, இந்த ஆண்டு வெளியீடு கண்ட ‘விக்ரம்’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய திரைப்படங்கள் உலக அரங்கில் தமிழ் திரைப்படத்துறையை திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
15ஆம் ஆண்டு எடிசன் திரை விருதுகளில் ஒரு தமிழ் நிறுவனம் தமிழர்களின் பெருமைகளை உலகுக்கு பறைசாற்றும் விதமாக அமைவது அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் ஊக்கமளிக்கும் என எடிசன் விருது குழுத் தலைவர் செல்வகுமார் மற்றும் அதன் இயக்குநர் மலேசிய தீனா தெரிவித்துள்ளனர்.