செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் பாடலாசிரியர் தாமரைக்கு விகடன் சினிமா விருது

பாடலாசிரியர் தாமரைக்கு விகடன் சினிமா விருது

2 minutes read

கவிஞர் தாமரைக்கு சினிமா விகடன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தாமரை பேஸ்புக்கில் எழுதிய பதிவு இதோ…

மாறா

படம்.          :     மாறா
பாடல்.       :     யார் அழைப்பது...
வரிகள்      :     தாமரை
இயக்கம்   :     திலீப்
இசை         :     ஜிப்ரான் 

இந்தப் படத்தின் ஆறு பாடல்களையும் நான் எழுதியிருந்தேன். கோவிட் நேரத்தில் எழுதி வெளிக்கொண்டு வந்த பாடல்கள்/படம் விதப்பானதோர் அனுபவத்தைத் தந்தது. என் திரைப்பாடல் வாழ்வில் குறிப்பிடத்தக்க பாடல்கள் ❤… அத்தனையும் தேன் ❤
மிகவும் இரசித்து எழுதப்பட்ட பாடல்கள்.
படமே கவிதையாக இருக்கும் 👏👏👏 அரங்கில் வெளியாகாமல் நேரடியாகத் தொடுதிரையில் வெளியான இரண்டாவது படம். சரியான பார்வையாளர்களைப் போய்ச் சேரவில்லை. வாய்ப்பிருப்பவர்கள் முன்முடிவு ஏதுமின்றி அவசியம் பாருங்கள். பாடல்களோடு சேர்ந்து வேறு உலகத்துக்குப் போய் வரலாம் 😍

இந்தப் பாடல், பயணம் செய்வது தொடர்பானது. பயணத்தில் நிகழும் சம்பவங்களைப் பற்றியோ, கதையை நகர்த்தியோ, குறிப்பிட்ட பயணத்துக்காகவோ எழுதப்பட்ட பயணப்பாடல்கள் ஏராளம் உண்டு.
ஆனால், பயணம் செய்வது பற்றியே எழுதப்பட்ட முதல்பாடல் இதுதான் என்று நினைக்கிறேன். பயணப்பித்துப் பிடித்தவர்களுக்குப் பிடித்த பாடலாக அமையும். இசையும் காட்சியும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு வரிகளுக்குத் துணை புரியும் ❤.

வாழ்க்கைப் பயணத்துக்கும் பொருந்தும் ! 😊

நன்றி திலீப், ஜிப்ரான் 

சுருதி நல்லப்பா, சித்ஸ்ரீராம்
Dhilip Kumar #Gibran

ShruthiNallappa #Sidsriram

PromodPictures

பி கு : இந்தப் படத்தில் எனக்கு தனிப்பட்ட பெருவிருப்பப் பாடல் ‘தீராநதி’ 😍😍😍. அடுத்து ‘காத்திருந்தேன்’ 😍😍😍.

மறக்க முடியா 2020 இரவுகள் 😀.

நன்றி விகடன் 🙏

விகடன்சினிமாவிருதுகள்

VikatanCinemaAwards

“பயணம் நிகழ்கிற பாதை முழுதும்
மேடையாய் மாறும்…
எவரும் அறிமுகம் இல்லையெனினும்
நாடகம் ஓடும்…
விடை இலாத பல வினாவும் எழ
தேடல் தொடங்கும்…”

நன்றி – தாமரையின் முகநூல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More