லாஸ்ஏஞ்சல்ஸ்: ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் ஹாலிவுட் படம் உலகம் முழுவதும் 10 நாளில் ரூ.7,500 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. கடந்த 16ம் தேதி ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம் வெளியானது. முதல் நாளில் இருந்தே வசூலில் இந்த படம் முன்னேறி வந்தது. இந்தியாவில் இதுவரை ரூ.220 கோடி வசூலித்து சாதித்துள்ளது.
2019ம் ஆண்டு வெளிவந்த ஸ்டார் வார்ஸ், தி ரைஸ் ஆப் ஸ்கைவாக்கர் படம் தான் கடைசியாக ஒரு பில்லியன் டாலர் வசூலை கடந்த படமாக இருந்தது. ஸ்பைடர்மேன், அமெரிக்காவில் 587 மில்லியன் யுஎஸ் டாலர், இங்கிலாந்தில் 68 மில்லியன், மெக்சிகோ 52 மில்லியன், தென் கொரியா 41 மில்லியன், பிரான்ஸ் 35 மில்லியன், பிரேசில் 31 மில்லியன், ஆஸ்திரேலியா 31 மில்லியன், இந்தியா 29 மில்லியன், ரஷ்யா 28 மில்லியன், இத்தாலி 21 மில்லியன், ஜெர்மன் 20 மில்லியன் என 1000 மில்லியன், அதாவது 1 பில்லியன் வசூலித்துள்ளது. 1 பில்லியன் யுஎஸ் டாலர் என்பது ரூபாய் மதிப்பில் 7,500 கோடி ரூபாய் ஆகும். இந்த படம் ரூ.1500 கோடி பட்ஜெட்டில் உருவானது. அதையெல்லாம் தாண்டி பல மடங்கு வசூலித்து வருகிறது.
நன்றி : தினகரன்.காம்