செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா அழகி படம் போல எந்தப்படமும் பாதிக்கவில்லை | 20 ஆண்டு கொண்டாட்டம்

அழகி படம் போல எந்தப்படமும் பாதிக்கவில்லை | 20 ஆண்டு கொண்டாட்டம்

2 minutes read

தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான அழகி, காதலை மையமாக வைத்து வெளியாகி ரசிகர்களை உணர்வுப்பூர்வமாக அணுகிய படம். இந்தப் படத்ந்த தில் நடிகர் பார்த்திபன், நந்திதா, தேவயாணி உள்ளிட்டவர்கள் நடித்திருஇந்தப் படம் 8 படங்களுடன் வெளியாகி சிறப்பான வெற்றியை கொடுத்தது.

தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான படங்களில் இந்தப் படம் அவரது கேரியர் பெஸ்ட் படமாக அமைந்தது. பார்த்திபன் நடிப்பிற்கும் சிறந்த உதாரணமாக இந்தப் படம் அமைந்தது.

அழகி படம் கடந்த 2002ம் ஆண்டில் தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியானது அழகிப்படம். காதலையும் இவ்வளவு உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த முடியுமா என்று ஆச்சர்யப்படுத்தும் படைப்புகளில் இந்தப் படத்திற்கு கண்டிப்பாக முக்கியமான இடம் இருக்கும். அந்த அளவிற்கு சிறுவயதில் ஏற்படும் காதலையும் திருமணத்திற்கு பிறகு தான் சந்திக்கும் காதலியையும் பிறகு அவர்களுக்குள் ஏற்படும் நிகழ்வுகளையும் மையமாக வைத்து இந்தப் படம் வெளியானது.

2002ம் ஆண்டில் வெளியான அழகி 1986ம் ஆண்டில் வெளியான கல்வெட்டு சிறுகதையை மையமாக வைத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு அழகி என்ற பெயரில் இந்தப் படம் வெளியானது. கடந்த 2002ம் ஆண்டு பொங்கலன்று பெரிய படங்களுக்கு மத்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டது அழகி படம். ரசிகர்களின் சிறுவயது காதலை வெளிப்படுத்தி மனதை வருடி கொள்ளைக் கொண்டது. படத்தை பார்த்தவர்கள், இந்தப் படத்தின் சண்முகம் மற்றும் தனலட்சுமி கேரக்டர்களை தங்களின் சொந்த வாழ்க்கையில் இணைத்து பார்த்து ஆனந்தம் கொண்டனர்.
20 ஆண்டுகளை கடந்த அழகி படம் வெளியாகி தற்போது 20 ஆண்டுகளை கடந்த நிலையிலும் ஒவ்வொருவரும் தங்களது தனலட்சுமியையும், சண்முகத்தையும் தேடிக் கொண்டிருப்பது இந்தப் படத்தின் வெற்றி. இந்தப் படத்தை தயாரித்த உதயக்குமார் தற்போது இயக்குநர் தங்கர் பச்சானை நேரில் சந்தித்துள்ளார். கரூரில் வசிக்கும் அவர், தன்னுடைய முதல் படத்தையே வெற்றிப் படைப்பாக கொடுத்த தங்கர் பச்சானை சென்னைக்கு வந்து சந்தித்துள்ளார். இவர்களது சந்திப்பு நீண்ட நேரம் நடந்தது.

பாதித்த அழகி படம் இத்தனை ஆண்டுகாலம் ஆகியும் அழகி படம் போல தன்னை வேறு எந்தப் படமும் பாதிக்கவில்லை என்று உதயக்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல, அழகிப்படம் உருவாக காரணமான உதயக்குமாரைத்தான் முதலில் அனைவரும் பாராட்ட வேண்டும் என்று தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர்களது சந்திப்பு தற்போது கவனத்திற்குள்ளாகியுள்ளது.
பார்த்திபனின் கேரியர் பெஸ்ட் படம் எப்போதும் கரடுமுரடான கேரக்டர்களில் அதிகமாக நடித்துவந்த நடிகர் பார்த்திபனை மிகவும் சாப்டான கேரக்டரில் இந்தப் படத்தில் நடிக்க வைத்திருந்தார் தங்கர் பச்சான். இந்தப் படத்தில் மருத்துவராக நடித்திருந்த பார்த்திபன், கைகூடாத காதல் மற்றும் வாழ்க்கையை தொலைத்த தன்னுடைய காதலியை பார்க்கக்கூடாத நேரத்தில், காலத்தில் பார்த்து, அந்தக் காதல் கொடுத்த வலியை இயல்பாக காட்டியிருப்பார். இந்தப்படம் பார்த்திபன் கேரியரில் பெஸ்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி : tamil.filmibeat.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More