கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர். அவரது படங்களில் பெரும்பாலான பாடல்கள் வெளிநாடுகளில்தான் படமாக்கப்படுகிறது.
இது குறித்து அவர் கூறியது: எனது பட பாடல்களை வெளிநாட்டில் படமாக்க வேண்டும் என திட்டமிட்டு செய்வது கிடையாது. பாடலுக்காக போடப்படும் பீட்ஸ்கள் அதை தீர்மானிக்கிறது. இந்தியன் படத்தில் டெலிபோன் மணிபோல், பாடலில் நிறைய மிருகங்களை காட்ட விரும்பினேன். காரணம், படத்தில் மனிஷா கொய்ராலா, பிராணிகள் மீது அக்கறை கொண்டவராக நடித்திருப்பார். நம் நாட்டில் விலங்குகளை வைத்து படமாக்குவதில் சிரமம் இருந்தது.
இதனால் வெளிநாட்டுக்கு போக வேண்டியிருந்தது. இதுபோல் ஒவ்வொரு பாடலுக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. முதல்வன் படத்தில் வெளிநாட்டில் பாடலை படமாக்கவில்லை. அந்த படத்தில் ஒரு பாடலுக்காக தேனிக்கு சென்று கிராமத்து பாணி ஆடைகளில்தான் பாடலை படமாக்கினேன்.
தயாரிப்பாளர் பணம் போடுகிறார். அவரது செலவில் வெளிநாட்டுக்கு போய் சுற்றிப்பார்க்க வேண்டும் என இதையெல்லாம் செய்வதில்லை. ரசிகர்களுக்கு கண்ணுக்கு விருந்து தர வேண்டும் என்பதால், சினிமாவில் காட்டாத லொகேஷன்களை தேர்வு செய்கிறேன். இவ்வாறு ஷங்கர் கூறினார்.
நன்றி : தினகரன்