ஒவ்வொரு ஆண்டும் மே 16ம் தேதி தேசிய கிளாசிக் சினிமா தினமாக கொண்டாடப்படுகிறது. எத்தனை காலம் ஆனாலும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ள படங்களே கிளாசிக் சினிமா என்றழைக்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் முதல் கிளாசிக் சினிமா என கூறலாம். பாகவதரின் பாடல்களுக்காகவே இந்த படம் கொண்டாடப்பட் டது.1952ல் கருணாநிதி வசனத்தில் வெளியான பராசக்தி திரைப்படம் பாடல்கள் குறைந்து வசனத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. சிவாஜி என்ற மிகப்பெரிய கலைஞனை உலகிற்கு காட்டியது.
அதன் பிறகு வெளியான சிவாஜி நடித்த பல படங்கள் கிளாசிக் படங்கள் தான். அண்ணன் -தங்கை பாசத்தை சொன்ன பாசமலர், கடவுள் என்றால் இப்படி தான் இருப்பார் என்று காட்டிய திருவிளையாடல், திருவருட்செல்வர் சுதந்திர போராட்ட வீரர்களை கண் முன் காட்டிய கப்பலோட்டிய தமிழன்,வீர பாண்டிய கட்டபொம்மன் என இன்றளவும் கொண்டாடும் கிளாசிக் படங்களை தந்தவர் சிவாஜி.
ஆயிரத்தில் ஓருவன், நாடோடி மன்னன் எனஎம். ஜி. ஆரின் கிளாசிக்கை சொல்லலாம். 1970களின் கடைசியும்,80களின் தொடக்கமும் இயக்குனர்களின் கிளாசிக் ஆண்டுகள் என்று தான் சொல்ல வேண்டும் பாலசந்தர் பல கிளாசிக் பல படங்களை தந்திருந்தாலும் இன்றைய பிரச்சனைகளுக்குள் பொருந்தும் தண்ணீர் தண்ணீர் மிக முக்கியமானது.
அரசியல் பேசும் அச்சமில்லை, அச்சமில்லை, பெண்ணியம் பேசும் மனதில் உறுதி வேண்டும் என பல படங்களை சொல்லலாம்.16 வயதினிலே தந்த பாரதிராஜா கிராமத்து கிளாசிக் டைரக்டர் என்று சொல்லலாம். தமிழக கிராமத்தை கோடம்பாக்க மாக மாற்றியவர். பெண் சிசுகொலையை பற்றி பேசிய கருத்தம்மா இன்றும் போற்றப் படுகிறது.
மணிரத்னம் மௌன ராகம் என்ற காதல் கிளாசிக்கை தந்தார். நாயகன், தளபதி என்ற ஆன்டி ஹீரோ சப்ஜெக்ட்டிற்கு பிள்ளையார் சுழி போட்டார். இன்றும் பொன்னியின் செல்வனாக உயர்ந்து நிற்கிறார் மணிரத்னம். உறவுகளை மைய்யப்படுத்திய மகேந்திரனின் உதிரி பூக்களும், முள்ளும் மலரும் படமும் எவர் க்ரீன் கிளாசிக்தான் கமல் -ஸ்ரீ தேவி நடிப்பில் வெளியான மூன்றாம் பிறை.
ஒரு நடுத்தர குடும்பத்தினர் வீடு கட்டுவதில் உள்ள சிக்கலை சொன்ன வீடு பாலுமேகேந்திரவின் யதார்த்த கிளாசிக் படங்கள். இந்தியாவில் பொது வெளியில் ஆண் பெண் பழக துவங்கிய போது ஏற்பட்ட சிக்கல்களை வைத்து உருவான ‘அவள் அப்படித்தான்’ என்று அடித்து சொன்ன கிளாசிக் படத்தை தந்தவர் ருத்ரய்யா.
திரைப்பட கல்லூரி மாணவர்கள் திரைக்கதை, தொழில் நுட்பம் கலந்து தந்த ஊமை விழிகள் படம் பலரின் விழிகளை ஆச்சரிய பட வைத்தது. ஆபவாணன் இந்த படத்தை தயாரித்து இருந்தார். சம காலத்தில் இது போன்ற காலம் தாண்டி கொண்டாடப் படும் படங்கள் கிளாசிக் படங்கள் வருவது குறைந்து வருகிறது.
பான் இந்தியா, வணிக ரீதியான படங்கள் அதிகம் வெளிவருகிறது. சம காலத்தில் விசாரணை, விடுதலை, ஜெயபீம் போன்ற படங்கள் மனித உரிமை மீறல்களை வெளி ப் படையாக காட்டி கிளாசிக் படங்களாக நிற்கிறது. வெற்றி மாறன் நம்பிக்கை தருகிறார்.
புது இயக்குனர் மந்திர மூர்த்தி மதம் அல்ல மனிதம்தான் முக்கியம் என்று சொன்ன அயோத்தி இந்த ஆண்டு வெளியான மிக சிறந்த கிளாசிக் படம் என்று சொல்லலாம்.இன்று கிளாசிக் படங்களின் வருகை ஓரளவு குறைந்து இருந்தாலும் மீண்டும் இது போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் வரும் என்பதை சில இயக்குனர்களின் படங்கள் நமக்கு உணர்த்துகிறது.
நன்றி : kalkionline.com