தளபதி விஜய் நடிப்பில் ஒக்டோபர் 19ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் ‘லியோ’ திரைப்படம் குறித்து வட இந்திய ரசிகர்களிடம் படக்குழுவினர்.
வெளியீட்டிற்கு முன்னர் விளம்பரப்படுத்தும் நிகழ்வை நடத்தி எதிர்பார்ப்பை ஏற்படுத்தாததால் ‘லியோ’ திரைப்படம் வட இந்திய ரசிகர்களை கவருமா? என திரையுலக வணிகர்கள் கவலையுடன் குறிப்பிடுகிறார்கள்.
தளபதி விஜய் நடிப்பில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ‘லியோ’. விஜய் படத்திற்கு தமிழகத்திலும், கேரளத்திலும் பெரும் எதிர்பார்ப்பும், ஆதரவும் ரசிகர்களிடத்தில் இருக்கிறது.
ஆனால் கர்நாடகாவிலும், மும்பை, புதுதில்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் லியோ படம் குறித்து படக் குழுவினர் பெரிய அளவில் கவனத்தைக் கவரக்கூடிய விளம்பரத்தை வெளியிடாததால் இந்த படம் ரசிகர்களிடம் முறையாக சென்று சேரவில்லை என வட இந்திய திரையுலக வணிகர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மேலும் இதன் காரணமாக ‘லியோ’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இந்திய மதிப்பில் 60 கோடி ரூபாய் முதல் 70 கோடி ரூபாய்க்குள் தான் இருக்கும் என அவதானிக்கப்படுவதாக திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் ‘லியோ’ திரைப்படம் வெற்றி பெற சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருப்பதால் வரும் நாட்களில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு வட இந்திய ரசிகர்களிடம் அதிகரிக்கும் என அவதானிக்கப்படுகிறது.