செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்ட நடிகர் அர்ஜுன் தாஸின் ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் பிரத்யேக காணொளி

ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்ட நடிகர் அர்ஜுன் தாஸின் ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் பிரத்யேக காணொளி

1 minutes read

நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஒன்ஸ்மோர்’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மிஸ் ஒருத்தி…’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவரது இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஒன்ஸ்மோர்’ எனும் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்கள்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் படத்தில் இடம்பெற்ற ‘மிஸ் ஒருத்தி..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் பிரத்யேகமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடல் பாடலில் கதையின் நாயகனான அர்ஜுன் தாஸ் மேடையில் பாடகராக தோன்றி தன் மனம் கவர் காதலியை பற்றி பாடுவது போல் காட்சிகள் இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More