புதுமுக நடிகர் கலைச்சோழன் , நடிகை தனலட்சுமி, திருவள்ளுவர்,திருமதி வாசுகி திருவள்ளுவராக நடிக்க ‘ திருக்குறள் ‘ எனும் பெயரில் திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘காமராஜ்’ எனும் பெயரில் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஏ. ஜெ. பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘திருக்குறள்’ எனும் திரைப்படத்தில் கலைச்சோழன், தனலட்சுமி, ஓ. ஏ. கே. சுந்தர், சுப்பிரமணிய சிவா, கொட்டாச்சி, குணா பாபு ,பாடினி குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை ஞானி’ இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
உலக பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் எனும் நூல் வழியாக அதன் அந்த நூலை படைத்த நூலாசிரியரின் வாழ்வியலையும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வாழ்வியலையும் மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தின் கதை திரைக்கதை வசனத்தை செம்பூர் கே. ஜெயராஜ் எழுதியிருக்கிறார். மதுரை டி பி ராஜேந்திரன் மற்றும் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் கோ. விஸ்வநாதன் ஆகியோரின் பங்களிப்புடன் ரமணா கம்யூனிகேஷன்ஸ் எனும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.
இப்படத்தின் காட்சிகளை பார்வையிட்ட ‘இசை ஞானி’ இளையராஜா படத்திற்கு பாடல்களை எழுதி, இசையமைத்திருக்கிறார். இசைஞானியின் கைவண்ணத்தில் ‘திருக்குறள்’ திரைப்படமாக உருவாகி இருப்பதால் தமிழ் ஆர்வலர்களிடத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.