செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்தின் பின்னணி இசையை நிறைவு செய்த இசைஞானி

வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்தின் பின்னணி இசையை நிறைவு செய்த இசைஞானி

1 minutes read

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி-  சூரி கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘விடுதலை 2 ‘ எனும் திரைப்படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேகப் புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற படைப்புகளை வழங்கிய இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை 2 ‘ எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி,  சூரி, பவானி ஸ்ரீ ,மஞ்சு வாரியர், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், கிஷோர் , அனுராக் காஷ்யப், இளவரசு, பாலாஜி சக்திவேல், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

சமூக சமத்துவம் எனும் கோட்பாட்டை முன்னிறுத்தி அரசியல் நிகழ்த்தி வரும் சிவப்பு சிந்தனையாளர்களின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை ஆர் எஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பங்கு பற்றி இசைஞானி இளையராஜா பேசுகையில், இப்படத்திற்கான பின்னணி இசையை விரைவில் தொடங்க இருப்பதாக பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நிறைவடைந்து இருப்பதாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும் படத்தின் பின்னணி இசை – ‘விடுதலை 2’ படத்திற்கான தனித்துவமான அடையாளம் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.  வெற்றிமாறன் – இசை ஞானி இளையராஜா கூட்டணியில் உருவான விடுதலை படத்தின் முதல் பாகத்தின் பாடல்களும் பின்னணி செய்யும் பேசு பொருளாக மாறியது. இந்த வெற்றியைத் தொடர்ந்து.. விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திலும் இந்தக் கூட்டணி மாய ஜாலம் நிகழ்த்தி, ரசிகர்களை வசப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More