இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமாரின் சகோதரியும், ‘விடுதலை’ படத்தின் மூலம் பிரபலமான நடிகையுமான பவானி ஸ்ரீ கதையின் நாயகியாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
‘ யாத்திசை ‘ எனும் படத்தின் மூலம் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் சேயோன் கதையின் நாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக நடிகை பவானி ஸ்ரீ நடிக்கிறார்.
இவர்களுடன் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆர். சேது முருகவேல் ஜகந்நாதன் ஒளிப்பதிவு செய்ய செய்யும் இந்த திரைப்படத்திற்கு சக்கரவர்த்தி இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தை ஜெ கே ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெ. கமலக்கண்ணன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரபல விநியோகஸ்தர் சக்தி வேலன், தனஞ்ஜெயன், நடிகர் சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கு பற்றி பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், அந்த தருணத்தில் படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் ,நடிகைகள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.