2
1 | முதல் படம் களத்தூர் கண்ணம்மா | ||
2 | முதல்படம் வெளியான ஆண்டு 12-08-1960 | ||
3 | சிவாஜியுடன் நடித்த முதல் படம் பார்த்தால் பசி தீரும் | ||
4 | எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் ஆனந்த ஜோதி | ||
5 | ஜெயலலிதாவுடன் முதல் படம் உன்னை சுற்றி உலகம் | ||
6 | முதல் மலையாளப் படம்(குழந்தை நட்சத்திரமாக) கண்ணும் கரளும் | ||
7 | முதல் ஹிந்திப்படம் ஏக் துஜே கேலியே | ||
8 | முதல் வங்க மொழிப் படம் கபிதா | ||
9 | முதல் கன்னடப் படம் கோகிலா | ||
10 | முதல் தெலுங்குப் படம் பொன்னி | ||
11 | கதாநாயகனாக நடித்த முதல் படம் பட்டாம்பூச்சி | ||
12 | முதல் இரட்டை வேடம்(குழந்தை நட்சத்திரமாக) பார்த்தால் பசி தீரும் | ||
13 | முதல் இரட்டை வேடம்(கதாநாயகனாக) சட்டம் என் கையில் | ||
14 | மூன்று வேடங்களில் நடித்த படம் அபூர்வ சகோதரர்கள் | ||
15 | நான்கு வேடங்களில் நடித்த படம் மைக்கேல் மதன காமராஜன் | ||
16 | பாலச்சந்தர் இயக்கத்தில் முதல் படம் அரங்கேற்றறம் | ||
17 | பாரதிராஜா இயக்கத்தில் முதல் படம் பதினாறு வயதினிலே | ||
18 | வில்லனாக நடித்த முதல் படம் சொல்லத் தான் நினைக்கிறேன் | ||
19 | மங்கம்மா சபதம் படத்திற்காகத் தான் முதல் முறையாக தமிழில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டது. | ||
20 | மொரீஷீயஸ் திரைப்பட விழாவில் நுழைந்த படம் வறுமையின் நிறம் சிவப்பு. | ||
21 | இந்தியாவிலேயே கண்தானம் செய்த முதல் நடிகர் கமல்ஹாசன். | ||
22 | ஈழத் தமிழராக இலங்கைத் தமிழ் பேசி நடித்த முதல் படம் தெனாலி. | ||
23 | சென்னைத் தமிழை பேசி நடித்தப் படம் சவால். | ||
24 | கமலின் 100வது படம் ராஜ பார்வை | ||
25 | கமல் தாயாரித்த முதல் படம் ராஜ பார்வை | ||
26 | ராஜ பார்வை திரைப்படத்திற்கு தமிழக அரசு வரி விலக்களித்தது. | ||
27 | ரஜினியுடன் நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள் | ||
28 | அபூர்வ ராகங்கள் படத்திற்காக முறைப்படி மிருதங்கம் கற்றுக் கொண்டார். | ||
29 | பாலமுரளி கிருஷ்ணா உதவியுடன் முறைப்படி சங்கீதம் பயின்றவர். | ||
30 | சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிற்கே செலவு செய்யும் ஒரே நடிகர். | ||
31 | இந்தியன் படத்தில் ஐந்து மணி நேரம் மேக்கப் போடப்பட்டது. | ||
32 | முத்தக்காட்சிகளில் அதிகம் நடித்தவர் கமல் ஒருவரே. | ||
33 | முதன் முதலில் முத்தக்காட்சி நடித்தப் படம் சட்டம் என் கையில் | ||
34 | ஆசியாவிலேயே மோஷன் கிராபிக்ஸ் என்ற நவீன கேமராவில் சண்டைக் காட்சி எடுத்தப்படம் ஆளவந்தான். | ||
35 | மாஸ்டர் கமல்ஹாசனாக கண்ணும் கரளும் படத்திலிருந்து சாணக்யன் வரை கமல் 35 மலையாளப் படம் நடித்துள்ளார். | ||
36 | கமல் எந்த மொழியில் நடித்தாலும் சொந்த குரலில் பேசி நடித்துள்ளார். | ||
37 | பார்த்தால் பசி தீரும் முதல் ஆளவந்தான் வரை இரட்டை வேடம் 21 படங்கள். | ||
38 | இந்திய திரையுலக சரித்திரத்திலே 610 பிரிண்ட் போடப்பட்ட முதல் படம் ஆளவந்தான். | ||
39 | கமல் 99 வயது கிழவனாக முற்றிலும் மாறுப்பட்ட ஒப்பனையில் வந்து பிரமிக்க வைத்தப் படம் ஹேராம். | ||
40 | இந்தியாவிலேயே மூன்று பேர் தேசிய விருது பெற்ற குடும்பம் கமல் குடும்பம், கமல்ஹாசன், சாருஹாசன், சுஹாசினி | ||
41 | ஆளவந்தான் படத்தில் கார் சேஸிங் ஒன்றில், கார் ரவுண்ட் அடிப்பதையும் ஜம்பிங் பாய்ந்து போவதையும் டூப் இல்லாமல் செய்தவர் கமல். | ||
42 | ஹேராம் படத்தில் 1927ல் மாடல் பியட்கார் இடம் பெற்றுள்ளது. இந்த கார் கட்ச் மகாராஜா பயன்படுத்தியது. | ||
43 | ஹேராம் படத்தில் ராம் ராம்….என்ற பாடலை கமல்ஹாசனின் மகள் சுருதியும், கமல்ஹாசனும் இணைந்து பாடியுள்ளனர். | ||
44 | பேசாத படம் பேசும் படத்தில் நடித்த முதல் நடிகர். | ||
45 | கலைமாமணி விருதை டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார். | ||
46 | கலைஞரிடம் கலைஞானி பட்டத்தையும் பெற்றவர். | ||
47 | ராஜ பார்வை படத்தின் போது இளைய வள்ளல் என்ற பட்டத்தை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார். | ||
48 | நூறு நாட்கள் தாண்டி ஓடிய படங்களின் எண்ணிக்கை126 | ||
49 | ஒரே ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 18 (1977) | ||
50 | ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்ட படம் பேசும் படம். | ||
51 | ராஜ் கமல் தயாரிப்பில் 14 படங்கள் | ||
52 | இயக்கியப் படங்கள் இரண்டு | ||
53 | ஆஸ்கார் சாதனை ஏழுப் படங்கள், ஆஸ்கார் நுழைவு வாயில் வரை சென்றன. | ||
54 | சிறந்த படங்கள் (தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டவை) வறுமை நிறம் சிவப்பு, 16 வயதினிலே,இந்தியன், | ||
55 | தமிழக அரசின்க சிறந்த நடிகருக்கான விருது 6 முறை பெற்றவர். | ||
56 | தமிழக முதல்வர்கள் இராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்.ஜானகி, கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் பாராட்டைப் பெற்றவர். | ||
57 | சிறந்த நடிகருக்கான தேசிய விருது மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் போன்ற படத்திற்காக கிடைத்தது. | ||
58 | ரசிகர் மன்றத்தை கலைத்து நற்பணி மன்றமாக மாற்றி தாமே தலைவராக இருந்து வழி நடத்தும் ஒரே நடிகர். | ||
59 | நற்பணி இயக்கத்தில் உள்ள அனைவரையும் இரத்த தானம் செய்ய வைத்த ஒரே நடிகர். | ||
60 | தன்னுடைய பிறந்த நாளில் தமிழ் இலக்கிய விருது வழங்கும் ஒரே நடிகர், விருது தொகை பத்தாயிரம். | ||
61 | தந்தைபெயரில் சமூக சேவை விருது வழங்கும் ஒரே நடிகர்,விருது தொகை பத்தாயிர்ம். | ||
62 | ஆண்டு தோறும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கும் ஒரே நடிகர். | ||
63 | ஆண்டு தோறும் சிறந்த நற்பணி செய்த மாவட்டங்களுக்கு பரிசு வழங்கும் ஒரே நடிகர். | ||
64 | ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளில் மட்டுமல்லாமல் மற்ற நாள்களிலும் தன் ரசிகர்களை தேசிய கொடி ஏற்ற வைத்தவர். | ||
65 | அதிகப் படங்களை இயக்கியவர் கே.பாலச்சந்தர் 23 படங்கள். | ||
66 | அதிகப் படங்களில் கமலுடன் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீதேவி 24 படங்கள். | ||
67 | சொந்த குரலில் பாடிய முதல் படம் அரந்தங்கம். | ||
68 | அதிகப் படங்களுக்கு பின்னணி பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். | ||
69 | பிற நடிகர்களுக்காக பின்னணி பாடியப்படங்கள் சரணம் ஐயப்பா, ஓ மானே மானே, உல்லாசம். | ||
70 | முதல் முதலில் பாடல் எழுதியப் படம் ஹேராம். | ||
71 | ஆவிட் எடிட்டிங்கை முதன் முதலில் ஏற்படுத்திய படம் மகாநதி. | ||
72 | ஆளவந்தான் படத்திற்காக டெல்லியில் ராணுவ வீரர்களுடன் ஒரு மாத பயிற்சி எடுத்து அங்கேயே படப்பிடிப்பு நடித்தினர். இதுவரைஅங்கு யாருமே படப்பிடிப்பு நடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. | ||
73 | ஸ்டெடி கேமராவை தமிழ் திரைக்கு அறிமுகப்படுத்தியப் படம் குணா. | ||
74 | ஆளவந்தான் படப்பிடிப்பு 200 நாட்கள் நடைபெற்றது இத்தனை கூடுதல் நாட்களில் எடுத்த முதல் தமிழ் படம் இதுதான். | ||
75 | டிடீஎஸ் செய்யப்பட்ட முதல் படம் குருதிப் புனல். | ||
76 | அதிக மொழிகளில் பேசப்பட்டப் படம் ஹேராம். | ||
77 | விஞ்ஞானம் வளர்ந்த உடன் லைவ் சவுண்டுடன் எடுக்கப்பட்ட முதல் படம் ஹேராம். | ||
78 | ஆளவந்தான் விஜய் கமல் பாத்திரத்தை விட நந்து கமல் ஐந்து கிலோ கூடியவர். | ||
79 | ஹங்கேரி சென்று பின்னணி இசை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ஹேராம். | ||
80 | முதல் முதலில் கமல்கதை, திரைக்கதை, வசனம் எழுதியப் படம் ராஜப்பார்வை. | ||
81 | திரைக்கதை மட்டும் எழுதியப்படங்கள் சத்யா,இந்திரன் சந்திரன், சதி லீலாவதி, விக்ரம்,அபூர்வ சகோதரர்கள். | ||
82 | கமல் பின்னணி பாடியப் படங்கள் 33. | ||
83 | இந்தியாவிலேயே மூன்று முறை தேசிய விருது(பாரத்) பெற்ற முதல் நடிகர். | ||
84 | பாலச்சந்தரின் 100வது படத்தில் நடித்த பெருமைப் பெற்றவர் (பார்த்தால் பரவசம்) | ||
85 | மத்திய அரசின் பிராந்திய மொழிகளுக்கான விருதுகள் அபூர்வ ராகங்கள், தேவர் மகன், மகா நதி, நம்மவர். | ||
86 | ஆந்திர அரசின் விருது மூன்று முறைப் பெற்ற முதல் தமிழ் நடிகர். சாகர சங்கமம், சுவாதி முத்தியம், இந்திருடு சந்திருடு. | ||
87 | சினிமா எக்ஸ்பிரஸ் விருது 13 முறைப்பெற்றவர். | ||
88 | பிலிம்ஃபேர் விருது 18 முறைப் பெற்ற ஒரே நடிகர். | ||
89 | பிலிம்ஃபேன்ஸ் அஸோஸியேஷன் விருது 30 முறை. | ||
90 | ஒரு வருடத்துக்கு மேல் ஓடியப் படங்கள் 7. | ||
91 | ஆளவந்தான் நந்துவின் பாத்திரம் இடது கண்ணை விட வலது கண் சிறியதாக இருக்கும். | ||
92 | தமிழ் நாட்டிலேயே இரத்த தானம் செய்த முதல் நடிகர். | ||
93 | படத்துக்கு படம் புதுமைகள் புகுத்தும் ஒரே நடிகர். | ||
94 | கமலுக்கு பிடித்த நடிகை சாவித்திரி, ஊர்வசி. | ||
95 | கமல் தன்னைவிட வயது மிகுதியுள்ள ஹேமமாலினி,ஷீலா, சுமித்ரா, லெட்சுமி விதுபாலா, வாணி கணபதி, ஸ்ரீவித்யா,ஜெயபாரதி,ஆலம் மஞ்சுளா, சுஜாதா, டிம்பிள் காம்போடியா ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார். | ||
96 | கதாநாயகனாக இருந்து மீண்டும் வில்லனாக நடித்த முதல் படம் சிவப்பு ரோஜாக்கள். | ||
97 | கமல் குள்ளமாக நடித்த முதல் படம் புன்னகை மன்னன். | ||
98 | ஐயங்கார் வகுப்பினத்தில் பிறந்த பகுத்தறிவு தந்தை பெரியார் கொள்கையை பின்பற்றும் ஒரே நடிகர் கமல். | ||
99 | இந்திய திரையுலவரலாற்றில் குள்ளமாக நடித்த முதல் நடிகர். | ||
100 | கமலுக்கு பிடித்த கவிஞர்கள் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன். | ||
101 | பிடித்த நடிகர் சார்லி சாப்ளின் | ||
102 | கமல்ஹாசன் நடித்து இதுவரை எந்த படமும் விலைபோகாத அளவிற்கு பஞ்ச தந்திரம் விலையாகி உள்ளது. | ||
103 | சிங்கப்பூர், மலேசியா,கனடா போன்ற வெளிநாட்டு உரிமையை மிகப் பெரிய தொகைக்கு விற்கப்பட்ட முதல் படம் பஞ்ச தந்திரம். | ||
104 | 62 நாடுகளில் வெளியிடப்படும் முதல் படம் பஞ்ச தந்திரம். |
நன்றி : லக்ஷ்மன் சுருதி