உங்கள் சுவையை தூண்டும் காளான் பரோட்டா சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான காளான் பரோட்டா ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!
சமைக்க தேவையானவை
உணவு செய்முறை : காளான் பரோட்டா
-
Step 1.
முதலில் கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். உப்பு மற்றும் நீர் சேர்த்து நன்கு மென்மையாக பிசையவும். பின்பு அதனை ஒரு பாத்திரத்தால் மூடி சிறிது நேரம் வைக்கவும். பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். பினபு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்ககவும். பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
-
Step 2.
பின்பு அதனுடன் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு கிளறவும். பின்பு நறுக்கிய காளான் சேர்த்து வேக வைக்கவும். காளான் வெந்தவுடன் ஜீரகத்தூள், கரம் மசாலா தூள், நல்ல மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பின்பு வெங்காயத் தாள் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு அதனை இறக்கி ஆற வைக்கவும். பின்பு பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து அதனை சம அளவுள்ள சிறிய பந்துகளாக உருட்டிக் கொளளவும். இரண்டு பந்துகளை எடுத்து அவற்றை சப்பாத்தி போல் விரிக்கவும். அதில் ஒன்றை எடுத்து அதன் மீது காளான் மசாலாவில் சிறிது வைக்கவும். பின்பு இரண்டாவது ரொட்டியை எடுத்து அதன் மீது வைத்து ஓரங்களை அழுத்தி மசாலா வெளியே வராமல் மூடவும்.
-
Step 3.
மீண்டும் அதனை சப்பாத்தி கல்லில் வைத்து விரித்து எடுக்கவும். பின்பு அதனை தவாவில் வைத்து வேக வைத்து எடுக்கவும் பின்பு அதனை திருப்பி போட்டு அதன் மீது சிறிது எண்ணெய் தூவி விட்டு பொன்னிறமாகும் வரை வைக்கவும். பின்பு அதனை ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
நன்றி : அறுசுவை சமையல்