தேவையான பொருட்கள் :
பச்சை மொச்சை-1/2 கிலோ
பெரிய வெங்காயம்-2
தக்காளி-2
பூண்டு-6 பல்
புளி கரைசல்-3 தேக்கரண்டி
கொத்தமல்லி-சிறிதளவு
தாளிக்க :
எண்ணெய் -தேவையான அளவு
சோம்பு-1 ஸ்பூன்
பட்டை,கிராம்பு,பெருங்காயம்
கருவேப்பிலை
அரைக்க :
தேங்காய்-அரை மூடி
சோம்பு,
கசகசா -சிறிதளவு
தேவையான பொடி வகைகள் :
மிளகாய் பொடி -1ஸ்பூன்(பெரிய ஸ்பூன்)
சாம்பார் பொடி – 3/4 ஸ்பூன் (பெரிய ஸ்பூன்)
சீரக பொடி -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் –சிறிதளவு
செய்முறை :
பச்சை மொச்சை மற்றும் பொடி வகைகளை போட்டு அரிசி களைந்த தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் பச்சை மொச்சை என்பதால் குக்கரில் வைக்க தேவை இல்லை .
பாதி கொதித்த பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம்,தக்காளி,பூண்டு நைத்தது ஆகியவற்றை போட்டு வதக்கி கொதிக்கும் குழம்பில் கொட்டி மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.
இப்போது புளி கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
கடைசியில் அரைத்த விழுதை போட்டு ஒரு கொதி வந்தவுடன் மல்லிதலை தூவி இறக்கவும்.
மிகவும் சுவையான பச்சை மொச்சை குழம்பு ரெடி.
நன்றி : சமையல் புலி