0
உங்கள் சுவையை தூண்டும் காலிஃப்ளவர் வறை சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான காலிஃப்ளவர் வறை ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!
சமைக்க தேவையானவை
- காலிஃப்ளவர் – 1
- வெங்காயம் – 1
- காய்ந்த மிளகாய் – 2
- கறிவேப்பிலை – சிறிதளவு
- மஞ்சள் – 1/2 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- கடுகு – 1/2 தேக்கரண்டிq
- பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
- எண்ணெய் – சிறிதளவு
உணவு செய்முறை : காலிஃப்ளவர் வறை
- Step 1.முதலில் ஒரு பாத்திரத்தில் மெல்லிய சுடுநீர் எடுத்து, அதில் உப்பு போட்டு கலக்கி காலிஃப்ளவரை ஒவ்வொரு பூவாக எடுத்துப் போடவேண்டும் . பிறகு அரை மணி நேரத்திற்கு பின்பு தண்ணீரில் இருந்து எடுக்கவேண்டும் .
- Step 2.இப்பொழுது காரட்டை துருவியில் துருவிக் கொள்ளுங்கள். பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- Step 3.பின்பு ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம், பெருஞ்சீரகம் போட்டு வதக்குங்கள்.
- Step 4.பின்னர் வெங்காயம் வதங்கியதும் மிளகாயையும், கறிவேப்பிலையும் கிள்ளிப் போடவும்.துருவி வைத்துள்ள காலிஃப்ளவரை போட்டு 2 நிமிடம் வதக்கவும். உப்பு சேர்த்து கிளறி மூடி வேக விடவும்.3 நிமிடத்தின்
- Step 5.பின்பு மூடியை திறந்து மஞ்சள் தூள், மிளகாய்தூள் சேர்த்து கிளறி திரும்பவும் மூடிவிடவும்.காலிஃப்ளவர் வெந்து தண்ணீர் வற்றியதும் ஒருமுறை கிளறி இறக்கவும்.இது சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
நன்றி : அறுசுவை சமையல்