என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் – 1 கப்,
துருவிய நெல்லிக்காய் – 2,
துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்,
நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் – 2,
மஞ்சள் தூள்-தேவையானால்,
வறுத்துப் பொடித்த வெந்தயத்தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.
தாளிக்க…
கடுகு, உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 5 இலைகள்,
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்.
அலங்கரிக்க…
வறுத்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – தேவைக்கு,
தேவையானால் தேங்காய்த்துருவல் – 1/2 கப்.
எப்படிச் செய்வது?
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, பருப்புகள் பொன்னிறமாக வறுபட்டதும் நெல்லிக்காய், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், உப்பு, வெந்தயத்தூள், சாதம் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை நிறுத்தவும். வேர்க்கடலை, கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
நன்றி
தினகரன்