தேவையான பொருட்கள்
சௌவ் சௌவ் – 200 கிராம்,
தேங்காய் விழுது – 50 கிராம்,
இஞ்சி,
பூண்டு,
மிளகாய் விழுது – 10 கிராம்,
கரம் மசாலா பவுடர் – 2 கிராம்,
ஒரு ஏலக்காய்,
ஒரு பட்டை,
இரண்ட லவங்கம் — 3 கிராம்,
கடுகு – 5 கிராம்,
சீரகம் – 3 கிராம்,
மிளகாய்த்தூள் – 10 கிராம்,
மல்லித்தூள் – 10 கிராம்,
எண்ணெய் – 60 மி.லி.கிராம்,
உப்பு – தேவைக்கு.
செய்முறை
சௌவ் சௌவ் காயை அரைவேக்காடு வேகவைத்துக் கொள்ளவும். தேங்காயுடன் சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணையை சேர்த்து கடுகு, சீரகம் தாளித்து, தேங்காய் விழுதினை சேர்த்து உடன் கரம் மசாலா பவுடர், மிளகாய் தூள், மல்லித்தூள், பொடித்த கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு வேகவைத்த காயை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
நன்றி-தினகரன்