உடலுக்கு வலுவையும் ஏராளமான சத்துகளையும் தரும் மாப்பிள்ளை சம்பாவின் மற்றொரு சிறப்பு ஆண்மை பலப்படுத்தும் என்பது தான். ஒரு மாதத்தில் பலனும் தெரிய ஆரம்பிக்கும்.
தேவையான பொருட்கள்
மாப்பிள்ளை சம்பா அரிசி – 2 கப், காய்கறிகள் -400 கிராம்,
துவரம்பருப்பு -150 கிராம்,
மஞ்சள் தூள் -2 சிட்டிகை,
கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம் -அரை தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் -3,
தக்காளி -2,
சின்ன வெங்காயம் -100 கிராம்,
பூண்டு -20 பல்,
சாம்பார்பொடி -3 மேசைக்கரண்டி,
புளி, -ஒரு எலுமிச்சை அளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு,
கறிவேப்பிலை -சிறிதளவு,
கொத்துமல்லி- சிறிது.
செய்முறை
காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
துவரம் பருப்பை வேக வைத்து கொள்ளவும்.
குக்கரில் மாப்பிள்ளைச் சம்பா அரிசியுடன் மூன்று பங்கு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும். பின் வேக வைத்த துவரம் பருப்பு, மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி குழைய வேகவிடவும்.
பின் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் சிறிது வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.
பிறகு, அதனுடன் கரைத்த புளித்தண்ணீர் சேர்த்து, நன்கு வேகவைக்கவும்.
வேகவைத்த பருப்பையும் காய்கறியுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
இந்தச் சாம்பார் கலவையைக் குழைய வேகவைத்த சோறுடன் சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
சுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் ரெடி.
நன்றி | மாலை மலர்