கரட் வடை இது மிகவும் சுவையானதும் சத்து மிக்கதும் ஆகும் இதை கரட் உண்ண விரும்பாத குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் .
தேவையான பொருட்கள்
உளுந்து 1/2 கப்
அரிசி ஒரு ஸ்பூன்
கரட் 1
கறிவேப்பிலை தேவையான அளவு
சின்ன வெங்காயம் தேவையான அளவு
மிளகாய் 3
உப்பு
எண்ணை
செய்முறை
முதலில் உளுந்து,அரிசி இரண்டையும் நன்றாக 1/2 மணி நேரம் ஊறவைக்கவும் பின் அதனை அரைத்து அதனுடன் கரட் மற்றும் மிளகாய் வெங்காயம் கறிவேப்பில்லை போன்றவற்றை சிறிதாக வெட்டி சேர்க்கவும் . உப்பும் தேவையான அளவு சேர்த்து பின் உளுந்து வடை போன்று பொறித்து எடுத்து கொள்க. கரட் வடை தயார் .