செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் ருசியாக நேர்த்தியாக சமைக்க சில குறிப்புகள்

ருசியாக நேர்த்தியாக சமைக்க சில குறிப்புகள்

2 minutes read

குக்கரில் பருப்பினை வேகவைத்தபின், குக்கரின் மூடியில் பருப்பு ஒட்டியிருக்கும். அதனை சமையலுக்குப் பின் கிளீன் செய்யும்போது, மிகவும் கஷ்டமாக இருக்கும். இந்நிலையில் சமைப்பதற்கு முன், நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை மூடிக்குப் பின் பகுதியில் தேய்த்துவிட்டு, அதனை வேகவைக்க விட்டுவிடவும். அதன்பின், அதனை கிளீன்செய்தால் எளிமையாகக் கிளீன் செய்துவிடலாம்.

சப்பாத்தி மாவு ஆகட்டும், பூரி மாவு ஆகட்டும் சில நேரங்களில் அதிகம் பிசைந்துவிடுவோம். அதை வீணாக்கமுடியாமல் ஃபிரிட்ஜில் வைத்திருப்போம். மறுநாளில் எடுத்து அந்த சப்பாத்தி மாவினைப் பார்க்கும்போது, கருப்பு கலரில் மாவு போன்று ஆகிவிடும். அப்படி மாறாமல் இருக்க, ஒரு கண்ணாடி டப்பாவில் சப்பாத்தி மாவினை வைத்து, காற்றுப்புகாதவாறு அழுத்திவிட்டு விடுங்கள். மேலே, எண்ணெயைத் தடவிவிட்டுவிடவும். அதன்மேல்மூடியை இறுக்கமாக வைத்து மூடிவிடவும். இதனால், சப்பாத்தி மாவோ அல்லது பூரி மாவோ கெடாமல் இருக்கும்.

உருளைக்கிழங்கு தோளை இப்படி சீவுங்க!

உருளைக்கிழங்கினை தோள் நீக்கும்போது கடினமாக இருக்கும். அதனைச்சமாளிக்க, உருளைக்கிழங்கை வேகவைக்கும்போது, அந்த தண்ணீரில் சிறிதளவு எண்ணெய்யும் உப்பும் போட்டுவிட வேண்டும். இதனால் உருளைக்கிழங்கு நன்கு வெந்துவிடும். தோள் நீக்குவதும் எளிதாகிவிடும்.

சில நேரங்களில் உரமோர் வீட்டில் இருக்காது. அப்படியிருக்கும்போது, பால் காய்ச்சிவிட்டு, வெதுவெதுப்பாக இருக்கும்போது ஒரு வர மிளகாயைப்போட்டால், எவர்சில்வர் பாத்திரத்திலேயே உரமோர் வைத்தால், தயிர் கிடைச்சிரும். தயிர் கிடைத்தவுடன் அது நீண்டநேரம் புளிக்காமல் இருக்க, எவர் சில்வர் பாத்திரத்தில் வைக்காமல், பீங்கான் பாத்திரத்திலோ, கண்ணாடி பாத்திரத்திலோ தயிரை மூடி ஃபிரிட்ஜில் வைத்துவிடவேண்டும். இப்படி செய்தால் தயிர் இரண்டு நாளைக்குப் புளிக்காமல் இருக்கும்.

சுண்டல் மற்றும் பச்சைப்பட்டாணி ஊறவைத்து சமையலுக்குப் பயன்படுத்துறது தான் நல்லாயிருக்கும். ஊறவைக்க நேரம் குறைவாக இருந்தால், ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீரை எடுத்துக்கொண்டு, ஒரு டீஸ்பூன் உப்பினைப்போட்டு சுண்டலோ அல்லது பச்சைப்பட்டாணியையோ ஊறவைத்தால், ஒரு மணிநேரத்தில் சமைப்பதற்கு ஏற்ற பதத்துக்கு சுண்டல் வந்துவிடும்.

நாம் வெளியில் பயணப்படும்போது இட்லி சுட்டுக்கொண்டு போவோம். ஆனால், அது பல நேரங்களில் சாப்பிடப்போகும்போது கெட்டியாகிடும். சாப்பிடப் பிடிக்காது. இதை மாற்ற 2 கப் மாவுக்கு, ஒரு டேபிள் டீஸ்பூன் சமைக்கப் பயன்படுத்தும்போது, எண்ணெயை ஊற்றி, கலக்கிவிட்டு, இட்லி ஊற்றினால் மிருதுவாக இருக்கும்.

புளித்த தோசை மாவை இப்படி தயார் செய்யுங்க!

தோசை மாவு இரண்டுநாட்கள் கழித்துப் பயன்படுத்தும்போது, புளித்துவிடும். அந்த புளிப்பு மாவினை, புளிப்புத்தெரியாமல் மாற்ற இரண்டறை கப் மாவுக்கு அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும். அடுத்து இரண்டு டீஸ்பூன் அளவு கடலைமாவு சேர்த்துக்கொள்ளவும். இதை இரண்டினையும் சேர்த்துவிட்டு, நாம் தோசை ஊற்றினால், தோசையின் புளிப்புத் தன்மை தெரியாது. தோசையும் மொறுமொறுன்னு ஹோட்டல் தோசை மாதிரி டேஸ்ட்டாக இருக்கும்.

இரும்புச்சட்டியை வைத்து சமைத்தபின், இன்னொரு பொருளைச் சமைக்க முயற்சிக்கும்போது, பழையபொருளின் வாசம் அடிக்கும். அப்போது, லேசாக அதை சுத்தப்படுத்திவிட்டு, அதில் தண்ணீரை ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்கவைத்துவிட்டு மீண்டும் கழுவிவிடவும். இந்த நிலைக்குப் பின், நாம் சமைக்கும்போது, இரும்புச்சட்டியில் எந்தவொரு வாசனையும் வராது.

மண்பானையில் பலருக்கும் விரைவிலேயே விரிசல் வந்திடும். அதற்குக்காரணம் என்னவென்றால், வெறும்பானையை வெப்பத்தில் வைத்து சூடுபடுத்தினால், கண்டிப்பாக மண்பானையில் விரிசல் விழுந்துவிடும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More