தேவையான பொருள்கள்:
முளைகட்டிய கொண்டைக் கடலை, முளைக் கட்டிய பாசிப்பயறு- தலா 200 கிராம்
மிளகாய் வற்றல்- 3
பெருங்காய்ப் பொடி, கடுகு, வெந்தயம், துவரம் பருப்பு- தலா 1 தேக்கரண்டி
தேங்காய்- 1 மூடி
உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை- தேவையான அளவு
மோர்- 400 மில்லி
செய்முறை:
முளைக் கட்டிய கொண்டைக்கடலை, பாசி பயறுடன் தேவையான உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கிளறி ஆறியவுடன் நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்க வேண்டும்.
மிளகாய் வற்றல், வெந்தயம், துவரம் பருப்பு எல்லாம் சேர்த்து சிறிது எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய் சேர்த்து அரைத்த மோருடன் தேவையான உப்பு கலந்து கொதிக்கவிட வேண்டும். கொதிக்க ஆரம்பித்தவுடன் வேகவைத்த உருண்டைகளைப் போட வேண்டும். கடுகு, பெருங்காயப் பொடி தாளித்து கறிவேப்பிலையைப் போட்டு இறக்க வேண்டும்.