பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தினால் ஆண்டுதோறும் நடாத்துகின்ற இலண்டன் தமிழர் சந்தை இம்மாதம் 20ம் 21ம் திகதிகளில் இலண்டன் பைரன் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு பற்றிய செய்தியாளர் சந்திப்பும் கலந்துகொள்ளும் வர்த்தகர்களுடைய அறிமுகமும் இன்று கால்டன் லோஞ்சில் நடைபெற்றது.
பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் எஸ் ஏ என் இராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் அனுசரணையாளர்கள், பங்குகொள்ளும் வர்த்தகர்கள், ஆதரவு வழங்குவோர் மற்றும் ஏற்பாட்டுக்குழுவினர் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வின் ஏற்பாடுகள் தொடர்பாக அறிமுகம் வழங்கப்பட்டதுடன் கலந்துகொண்டவர்களின் கேள்விக்குப் பதில்களும் வழங்கப்பட்டன. வழமைபோன்று சுமார் 100 க்கும் மேற்பட்ட தமிழ் வர்த்தகர்கள் கலந்துகொள்ள இருப்பதுடன் சுமார் 8000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.