கேரள மாநிலம் – வயநாட்டில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட மண்சரிவில் ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்தனர்.
கடற்படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், பொலிஸார், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், காயம் அடைந்தவர்களை மீட்டு, வைத்தியசாலைகளில் அனுமதித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 291ஆக உயர்ந்துள்ளதுடன், இதுவரை 1,500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து 3ஆவது நாளாக நடைபெற்று வருகிறதுடன், பலர் மாயமாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிரிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.